Friday, January 24, 2020

திருப்பாவை சாரம் :

திருப்பாவை சாரம் :

1. பேடிகா விபாகம். 

ஐந்தினோடு பத்துமொரு மூன்றும் பதியொன்றும்
தந்தநம் கோதை திருப்பாவை-- அந்தமோடு
ஒன்றுமாய முப்பதும் எப்போதும் செப்பவே
ஒன்றுமவள் பேறு நமக்கு.

1. நாராயணனே நமக்கே பறை :
பாவையர் நோன்பை அநுகரித்து நல்திருப்
பாவை பதிகம் பணித்தளாம்நம் -- கோதைதன் 
கூற்று அடியார் அவர்கூடி மாலிரைஞ்சிப் 
போற்ற பறையது பெற்று.



2. வையத்து :
தியானமும் அர்சனம்போல் நாமசங் கீர்தனம்
வாயும் கலியில் உலகத்து-- ஆய
அனைவர்க்கும் ஆற்ற அமைந்ததாம் வாழ்வு 
முனைவார்க்கு உற்றதோர் ஆறு. 


3. மும்மாரி :
மூரிநீர் புக்கு முகந்துபெய் மாரியின் 
பெரிய கருணை உளதோவென்  -- தேறில் 
பெரியமால் மாவலிப்பால் மாணியாய் கூசா  
திரந்தளித்தான் வண்மையே மிக்கு. 


4. ஊழி முதல்வன் :
பொன்னை மெழுகொற்றி தேற்றுமா போலேயாய்
தன்னைக் கொடுதரணி எல்லாமும் -- முன்னைபோல்
தான்தோற்று வித்தல் சமநோக்கே! ஊன்உயிர்
மேன்ஏற்றல் ஆம்தனி நோக்கு.


5. தூயோமாய் வந்து தூய பெருநீர் தூமலர் தூய் :

தன்கைகால் மெய்வாயும் கொடுஅளைந்த காளிந்தி
போன்கரணம் மூன்றும் கொடுகண்ணன் -- தன்நினைவால்
எண்ணம் மொழிசெய்கை ஒன்றிச் செய்கிரியை
வண்ணம் அழகியபூ நாறு.


6. பிள்ளாய் :
கற்றதன்றி உற்ற தவன்னடியார்க் காள்எற்றோ ?
பெற்ற பரமன் நமைஉடைத்தாய் -- மற்றையார்
விற்கவும் பாற்றென போக்க இசைந்தது

ஏற்கை நமஎன்பார் சாற்று.

7. கலந்து பேசின பேச்சரவம் :
வதரிவான் வைகுந்தம் பார்த்தன்தேர் முன்னாய்
கதிரொளி மால்கண்ணன் கேசவனன் -- றோதிய
மெய்மைப் பெருவார்த்தை ஒவ்வொன்றும் மால்மாறன்
வாய்மொழிக் குள்ளாதல் கொள்ளு.

8. வந்து நின்றோம் :
காசை இழந்தவன் பொன்னை இழந்தவன்
ஆசை மணியை இழந்தவன் -- பேசநின்ற
மால்நிற்க பத்தர் பரவுவார், வீடணன்போல்
கோல்கொழுந்த தற்றே அவர்.

9. 
பாகவத ஸம்பந்தம் ஸ்வதந்திரோபாயம்:
இருகால் விலங்கு இறகுடை பட்சி
ஒருகால் திருமால் அடியார் -- அருள்நோக்
கிலக்கதேல் ஞான மநுட்டான மில்லா
நிலையரேனும் சேரும்மால் வீடு.

9. மாமான் மக்களே :உனக்கேநாம் ஆட்செய்வோம் என்று தொடங்கி
உனக்கும் உனதடிய ராவார் — தமக்குமாய்பின்
மாலே! உனதடியார் பாலேயாய் கோலுமது
ஏலுவதும் என்கொள் குறிப்பு?

10. ஆற்ற அனந்தல் :
ஆறும் அடைவும் அவன்தாள் எனவாகக்
கூறும் நினைவும் உறுதியும் -- பேறெனத்
தேறி அதன்வழி வாழுநற் சோம்பர்
உறவும் முறையும் விழைவு.

11. பொற்கொடி :

தனக்கும் பிறர்க்குமாய் அன்றி உறவு
எனக்குநீயே அன்றோ? எனவாய் — புனக்காயா
மேனிப் புனிதன் புணர்தியில் ஆம்உணர்த்திக்
கானகூட்டு மாலடியார் மாட்டு.


12. மனத்துக்கினியானை அனைத்தில்லத்தாரும் அறிந்து :
பெண்ணுக்கும், பேதைக்கும் ஞானபக்தி யாளர்க்கும்
நண்ணித் தொழுவார்க்கும் நண்ணல் — விழையார்க்கும்
அண்ணல் இராமா நுசனை இராமனும்போல்
எண்ண இனிக்கும் உளம்.

13. கீர்த்திமை பாடிப் போய் :
ஆறும் பயனுமாய் தேறாது பாடிப்போம்
பேறு அதுவேயாய் கந்தல் -- கழிந்தமை
கூறு மொருநாலும் மூன்றும் இரண்டும்வான்
ஏற பரமனைப்போய்ப் பாடு.

14. எங்கள்மேல் சாபம் இழிந்து :
செய்யாள் அவள்திரு மேனிதன் செவ்விமால்
மையோ டியகண் களில்மேவ -- செய்யகண்ணர்
என்னவரும் ஆவார் கருணையும் கண்டிப்பும்
ஒன்று பிறிததாம் நோக்கு.

15. நானேதான் ஆயிடுக :
அடியார்க் கிசைந்து அறியா திழைத்த 
படிறு அதுவேனும் அன்றி -- கடிந்தமை 
ஆற்றா தவரேனும் ஏற்றனமாய் தாழ்கையே 
நோற்பார் சிறக்கும் இயல்பு. 


16. நென்னலே வாய் நேர்ந்தான் :
கூடி இருந்ததாம் காலத்து கண்ணன்தான் 
தேடி உரைத்தவையே கொண்டுயாம் -- நாடிவந்தோம் 
நாயகநீ! கைபூட்டி ஆகாதென் ஓவாதே 
நேய நிலைக்கதவம் நீக்கு. 


17. அறம் :
அம்பரமே தண்ணீரே சோறே அறம்கண்ணன்
எம்பெருமான் தம்மின் இரக்கமும் -- அம்மனோய்!
செம்மைசேர் நற்தருமம் என்றாக செய்தவேள்வி
தன்மையார் நற்பேறும் அஃது.

18. நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் :
சுள்ளிக்கால் அன்ன அடியார் அவர்தலைவர்
உள்ளம் பெரியதன் போதமுடன் -- எள்ளிநமைத்
தள்ளாதே கொள்ளும் தகைமை கொழுகொம்பாய்
வள்ளிமேய பந்தல் படுத்து.

19. குத்து விளக்கு :
தன்னையும் காட்டிபுறச் சூழலும் காட்டுவதாம்
மின்னனய நல்விளகு போல்ஆசான் -- துன்னிருள்
நம்மில் துறத்துவனேல் அன்னை அவளுணர்த்த
தம்மின் வழிநடத்தும் மால்.

20. உன்மணாளனைத் தந்து :
மைத்துனன் உன்மணாளன் மாலோலன் மாலரையன்
மையகண்ணி நாதன் திருவுக்கும் — ஐய
திருவான செல்வன் மலராள் தனத்தன்
ஒருவன் அவன்தா எமக்கு!

21. ஏற்ற கலங்கள்:
ஏதிலார் எம்மனோர் ஆதரித்து ஆசரியன்
ஈத்தானாய் அல்பா வதிஆயுள் -- போதில்
பொழுதறிந்து போற்றி அலகில் தருமம்
விழைந்துகேட்ப்பார் ஏற்ற கலம்.

22. செங்கண் :
கழிவிரக்கம் காட்டி கழித்தன போக்கி
அழல விழித்து அகல்விப்பான் -- பாழே
பலபல செய்து புகல்அயல் இல்லா
புலையனேர்க்கு அங்கண் அருள்.


23. சீரிய சிங்காசனத்து இருந்து : நடுவிலாச்சிக் கீத்த படுக்கை அறைவார்த்தை
காடேற வாயித்தால் கண்ணா! -- அடிசியோம்
காண நடந்துஅரி ஆசனத்தே வீற்றிருந்து
வேணுமவை ஆய்ந்து அருள்.

24. இன்று யாம் வந்தோம் :
அன்புடை ஆழ்வார்கள் போற்றி எனஏற்றி
நன்குடனே நாளும் வழுத்துலும் -- இன்னும்
பெரியாழ்வார் அஞ்சாமைக் காட்டியதுக் கஞ்சும்
பெருமைஆண் டாளுக்கும் உண்டு.

25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கருமவினை
கூற பிரிவினை இங்காகல் -- மாறமால்
தானும் பிறந்து இருமை வினைத்தீர்துப்
பேணும் கருணை பெரிது.

26. மாலே : ஆர்த்தி பூர்த்தி :
சரணமானால் வைகுந்தம் சேர்வழக்கு கொண்டு
மரணமானால் மேவப் பெறுவதூம் -- ஆரணமால்
ஊழ்வினை நம்போக்க மற்றபற்று அற்றராய்
சூழ்வினை அவனடியார் காத்து.

27. பாலேபோல் சீர் :
தேமதுர பாலேபோல் சீர்தன்னால் தன்பால்
நமவெனலார் தாம்தோற்ப தன்குணம் -- மாமே!
சமன்கொள்நல் வீடுசெய் மாலுக்கு தொண்டு
அமைந்தோமாய் கூடிக் களித்து .

28. கறவைகள் :
புறம்புண்டாம் வேத நெறிமேவல் விட்டு
திறம்காட்டும் என்ஒருவன் தாள்கிட்டல் -- தேறுமென்
உரைத்த மொழிவழியே கைமுதல் வேட்டா
குறையில்லா கோவிந்தன் நாட்டு.

29. மற்றை நம் காமங்கள் மாற்று :

அடிமைக்கண் அன்புசெய் ஆர்வத் தறிவு
உடைமைக்கண் தேடும் மகிழ்ச்சித் -- தடையாம்
அடைந்து அனுபவிக்க புக்கால்நில் என்ன
மிடையாது நிற்றல் தலை.

30. இங்கிப் பரிசுரைப்பார் :
பால்கொடுக்கும் ஆவும்தோல் கன்றுக் கிரங்குமா
போல்கோதை வாய்பிறந்த இப்பாவை -- நூல்படிப்பார்
பால்ஆய மாலும் தயங்கா திரங்கும்என
வால்பெறலாம் எங்கும் திரு.

-- தாசாரதி தாஸன் ,
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாச தாஸன்.

Tuesday, January 21, 2020

ஆசார்ய ஹ்ருதயம்.

ஆசார்ய ஹ்ருதயம்.
விவேக பலம் வீடு - பற்று :
ஸப்த படி :
அசித் - அயன சம்பந்தம்
அவித்யா - ஸௌஹார்தம்
அந்தம் - அனந்தம்
கர்மம் - கிருபை
ஜன்மம் - ஜாயமான கடாட்சம்
அசத்வம் (ரஜஸ்+தமஸ்) - சத்வம்
அஜ்ஞானம் - அர்த்தபஞ்சக ஞானம்
துக்கம் - நிரதிசய ஆனந்தம்
ஸம்சாரம் - மோட்சம்.

சாஸ்திரத்தின் பெருமை :
விசிஷ்ட வேஷம் - நிஸ்கிருஷ்ட வேஷம்
சரீர சம்பந்தம் - ஸுத்தாத்ம தத்வம்
சாஸ்திரம் - சாஸ்திர சாரம்
முனிவரை இடுக்கி - முன்னீர் வண்ணனாய்
வேதம் - திருமந்திரம்
அதிகாரி நியமம் - ஸர்வாதிகாரம்
சேஷத்வ+போக்த்ருத்வம் - பாரதந்திரிய+போக்யதை
இஷ்ட வினியோகார்ஹம் சேஷத்வம் - இஷ்ட வினியுஜ்யமானத்வம் பாரதந்திரியம்
ஸ்வ-ஸ்வரூபப்படி - பகவத் திருவுள்ளப்படி
நம்முடைய கைங்கார்ய அனுபவம் பிரதானம் - பகவத் கடாட்ச வீட்சிண்யம் பிரதானம்
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸவபதஸ்சத என்கிற நம் நினைவு - உன் மனத்தால் என்நினைந்திருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே என்கிற அவன் நினைவு .
கோத்ர+சரண+சூத்ர கூடஸ்தர் - பராங்குச+பரகால+யதிவரர்
சமஸ்கிருதம் - ஆகத்யம் (தமிழ்)
பர வியூக விபவ அந்தர்யாமி அர்ச்சை - வேதம் பாஞ்சராத்ரம் மனு ஸ்மருதி இதிஹாசம் திவ்யபிரபந்தம்
வேத வேத்யன் நியாயப்படி
ரிக் யஜு சாம அதர்வம் - திருவிருத்தம் திருவாசிரியம் திருவாய்மொழி பெரிய திருவந்தாதி
தர்மவீர்ய ஞானத்தால் பாடினார்கள் - மதிநலம் அருளப்பெற்ற பக்தியினால் பாடினார்
பர வியூக விபவ அந்தர்யாமி விஷயம் - அர்சாவதாரம் விஷயம்
உப்புக்கடல் - மேகம் பருகின சமுத்ராம்பு போலே இவர் வாயனவாறே ஸர்வதா ஸர்வோபஜீவிதம்.

ஆழ்வார் பெருமை :
ஆழ்வார் சாரஜ்ஞர்
திருவாய்மொழி+மற்ற பிரபந்தங்களுக்கு சாஸ்த்ர சாரமான ரஹஸய திரயமும், அர்தபஞ்சகமும் விஷயம்.
வீட்டின்பம் இன்பமாரி இன்பபாவில்
(பிரமேயம் பிரமாதா பிரமாணம்)
திரவ்ய வர்ண பாஷா
நிரூபணம் (ஆராய்சி) மாத்ருயோநி பரீட்சையோடு ஒக்கும்.
ஞானமாகிற தாமரை மலர - அச்சுத பாநு x யானே எந்தனதே என்றிருந்தேன்
சம்ஸாரமாகிற கடல் வற்ற- ராம திவாகர x வேறாகவே விளையும் வீடு
அஜ்ஞானமாகிற இருள் விலக - ஆதித்ய x திருவாய்மொழி
ஆகிய இம்மூன்றும் வகுளபூஷண பாஸ்கரோதயத்திலே.
இவர் ஆவிர்பாகம் குவசித் குவசித் என்று பாகவதத்தில் ஸுகர் சூசிப்பித்தது.

ஞானத்தில் தன்பேச்சு, பிரேமத்தில் பெண்பேச்சு.
தானாக - 73
தாய் - 7
தோழி - 3
மகள் - 17
தூது - பறவை - ஆசாரியன் - ஞானம், அநுட்டாணம் சிறகு
மடல்
அநுகாரம்
நவதிருப்பதி 9 + மலையாள தேசம் 12 + இதர திவ்யதேசம் 17 = 38
ஶ்ரீரங்கம் - வியூக ஸௌஹார்தம்
திருவேங்கடம் - வாத்ஸல்யம்
ஆழ்வார் திருநகரி - பரேசத்வம்
குடந்தை - மாதுர்யம்
குறுங்குடி - லாவண்யம்
வானமாமலை - ஔதார்யம்

திருவாய்மொழியின் சீர்மை :
கீதையும் - திருவாய் மொழியும்
தத்வ வசனம் - தத்வ தரிசி வசனம்
100றுவரை மாய்க்க - 25 விஷய வாசனா பிரக்ருதி+ஆத்ம மயக்கை ஒழிக்க
கொல்ல - உத்தரிக்க
சந்தோஷம் -> துக்கம் - துக்கம் -> சந்தோஷம்
நம்பி சரண் என்று தொடங்கி ஏபாவம் என்று முடிந்தது கீதை - ஏபாவம் பரமே! என்று தொடங்கி உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் என ஆழ்வார் முடித்தார்.

திருவாய்மொழியில் ஸ்வாபதேசம் :
பரத்வம் - ஞப்தி
காரணத்வம் - முக்தி
வியாபகத்வம் - விருத்தி
நியந்த்ருத்வம் - விரக்தி
காருணிகத்வம் - பக்தி
சரண்யத்வம் - பிரபத்தி
சக்தத்வம் - சக்தி
சத்யகாமத்வம் - ஆர்த்தி
ஆபத்சகத்வம் - பூர்த்தி
ஆர்த்திஹரத்வம் - முக்தி பிரதத்வம்
இவை 10 பத்துக்கும் விஷயம்

இனி இனி என்று 20ன் கால் கூப்பிட்டும் உறாமை
பிரபந்தம் தலைக்கட்ட ( எடுத்த எடுப்பிலே ஆயிரத்துள் இப்பத்து என்று இவர்வாயில் நின்று பேச வைத்து, அத்தை தலைக்கட்டவேண்டி)
நாடுதிருந்த (பாசுரங்கள் பாடியது மட்டுமல்லாது, நாதனுக்கு 4000 உரைத்தது, பவிஷயத் ஆசார்யரை பிரசாதித்தது)
நச்சுப்பொய்கை ஆகாமைக்கு (பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் இன்னின்ற நீர்மை இனியாமுறாமை என்ற போதே மோட்சம் கொடுத்திருந்தால், இவர் பாசுரங்களை காளியன் மடுக்கரை தீர்த்த பிராசனம் போலே வாய் வைப்பார் இல்லாது, அதனால் உலகம் நச்சுப் பொய்கை ஆகாமைக்கு)
அவருடைய ஆர்த்தியில் - பரபக்தி பரஜ்ஞான பரம்பக்தி தசை அளவாக - பூர்த்தியை வளைவித்து அழைத்துக்கொள்ள.

மயர்வற - வீடு பெற்ற என்பது பிரபந்த பூர்த்திக்குமான ஐக்கார்த்தம் அதாவது ஒன்றான தாத்பர்யமாகும். பிரபன்ன ஜன கூடஸ்தரான அந்த ஆழ்வார் சம்பந்தத்தால் நமக்குமாகக் கடவது வீடு பேறு என்பதே ஆசார்ய ஹ்ருதய கிரந்தத்தின் உட்கருத்து.

—Excerpts from Sri. U. Ve. Velukkudi Swami Sydney lectures.
Compiled by (Agaram) Kidambi Srinivasa Rangan Srinivasa Dasan.